
இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிக்கெட் வேட்டை தொடங்கியது – முன்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
#OpenDoomsdayBookings கோரிக்கைக்கு மார்வெல் அளித்த பதில் – முக்கிய நகரங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக விற்பனை!
உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இந்திய வெளியீட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. முன்பதிவு தொடங்கிய உடனேயே ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியதால், பல்வேறு நகரங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவில் பெரும் போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. சில திரையரங்குகளில் குறிப்பிட்ட காட்சிகளுக்கான இருக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை ரசிகர்களின் வசதிக்காகப் பல்வேறு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
இந்தியாவில் படத்தின் முன்பதிவை விரைவாகத் தொடங்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, #OpenDoomsdayBookings என்ற ஹேஷ்டேக் இணையத்தில் கவனம் ஈர்த்தது. மார்வெல் இந்தியா நிறுவனத்திடம் முன்பதிவை உடனடியாகத் தொடங்குமாறு ரசிகர்கள் பல்வேறு வழிகளில் கோரிக்கை வைத்தனர். சிலர் பதாகைகள் ஏந்தியும், பலர் நகைச்சுவையான பதிவுகள் மூலமாகவும் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர். தற்போது முன்பதிவு தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்கான வரவேற்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. உலகளாவிய முன்பதிவு விற்பனை 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளதாகவும், பிரீமியம் திரையரங்குகளுக்கான முன்பதிவு முதல் 24 மணி நேரத்தில் மட்டும் 16.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், படத்தின் முதல் முழுநீள டிரெய்லர் வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே 503 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் திரைப்பட டிரெய்லர் வரலாற்றில் அதிக பார்வைகளைப் பெற்ற இரண்டாவது பெரிய வெளியீடாகவும் இடம்பிடித்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் முன்பதிவு விற்பனை புதிய சாதனைகளை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
வர்த்தக வட்டாரங்களின் கணிப்புகளின்படி, படத்தின் முதல் வார இறுதி உலகளாவிய வசூல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருந்தாலும், தற்போதைய ரசிகர்களின் வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது.
இந்திய ரசிகர்களுக்கு மற்றொரு சிறப்பம்சமாக, அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தியாவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. டிசம்பர் 17ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், மார்வெல் ஸ்டுடியோஸ் பிரசண்ட்ஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குத் தொழில்நுட்ப வடிவங்களிலும் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது.
ரசிகர்களின் தொடர் கோரிக்கைக்குப் பிறகு முன்பதிவு தொடங்கியிருப்பதால், தற்போது அவர்களின் கவனம் முழுவதும் முதல் நாள் முதல் காட்சியைப் பெறுவதில்தான் உள்ளது. மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் அதிரடி உலகத்தைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் தயாராகிவிட்ட நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ வெளியீட்டை நோக்கிய கொண்டாட்டமும் இந்தியாவில் களைகட்டத் தொடங்கியுள்ளது.

Avengers: Doomsday Ticket Frenzy Begins in India; Fans Rush to Book Tickets as Advance Sales Open!
#OpenDoomsdayBookings Campaign Pays Off as Marvel Fans Celebrate the Start of Advance Bookings; First-Day Shows Witness Strong Demand Across Major Cities!
The excitement surrounding Marvel Studios’ highly anticipated film Avengers: Doomsday has reached a new high in India, with advance bookings officially opening at midnight. Fans who have been eagerly waiting to witness the next chapter of the Marvel Cinematic Universe on the big screen have wasted no time in securing their tickets, resulting in brisk sales across several cities.
Major cities, including Mumbai, Bengaluru, Delhi, Hyderabad and Kochi, are witnessing strong demand for multiple shows, with tickets selling rapidly. Reports indicate that tickets for select shows have already sold out. With screenings scheduled throughout the day, from early morning to late night, fans are gearing up to experience the film on the big screen as early as possible.
The opening of advance bookings comes after weeks of persistent demands from Indian Marvel fans on social media. Under the hashtag #OpenDoomsdayBookings, fans repeatedly urged Marvel India to open ticket sales without further delay. Some even took their excitement to the streets, holding placards demanding that bookings begin, while others shared humorous posts expressing their impatience. The commencement of advance bookings has now sparked celebrations among fans across the country.
The enthusiasm surrounding Avengers: Doomsday is not limited to India. The film is reportedly witnessing an impressive response in international markets as well. Global advance ticket sales are said to have crossed $150 million, while premium-format bookings alone generated $16.5 million within the first 24 hours.
Adding to the film’s growing anticipation, its first full-length trailer reportedly garnered over 503 million views within just 24 hours of release, making it the second-biggest trailer launch in cinematic history in terms of views. Markets such as the UK and Brazil are also reportedly setting new benchmarks in advance ticket sales.
According to trade estimates, Avengers: Doomsday could potentially cross the $1 billion mark in worldwide collections during its opening weekend. While the actual box-office performance remains to be seen, the unprecedented buzz surrounding the film has already raised expectations for a massive global opening.
India holds special significance for the film’s release, as audiences will get to watch it a day ahead of its US release. Scheduled to arrive in theatres on December 17, Avengers: Doomsday will release in English, Hindi, Tamil and Telugu. The film will also be available in premium theatrical formats, including Marvel Studios Presents Infinity Vision.
With advance bookings now officially underway, the countdown to Avengers: Doomsday has entered an exciting new phase. After weeks of campaigning and anticipation, Marvel fans in India have finally got what they were waiting for. The race to secure tickets for the first-day, first-show experience has well and truly begun!
