Thursday, November 19
Shadow

மின்மாற்றிக்குள் கூடு கட்டிய பறவைகள்… இயற்கையைக் காக்க ஒன்றிணைந்த கிராமம்! கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படமான ‘கூடு’வுக்கு சிறப்பிடம்!

மின்மாற்றிக்குள் கூடு கட்டிய பறவைகள்… இயற்கையைக் காக்க ஒன்றிணைந்த கிராமம்! கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படமான ‘கூடு’வுக்கு சிறப்பிடம்!

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் காலா பிரீமியர் பிரிவில் தேர்வான ஒரே தமிழ்ப் படம் – 2027 தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

இயற்கையின் மீது மனிதர்கள் காட்டும் அக்கறையும், ஒரு சமூகத்தின் ஒற்றுமையும் எத்தகைய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறது ‘கூடு’ (KOODU) திரைப்படம். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

இந்த ஆண்டு இப்பிரிவில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் ‘கூடு’ பெற்றுள்ளது.

ஒரு மின்மாற்றிக்குள் அரிய வகைப் பறவைகள் கூடு கட்டினால், அதனால் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களைச் சரிசெய்ய கிராம மக்கள் என்ன செய்வார்கள்? வழக்கமாக மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மாறாக, பறவைகளின் வாழ்வையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒட்டுமொத்த கிராமமும் எடுக்கும் முடிவுதான் இப்படத்தின் மையக்கரு.

ஒரு சாதாரண கிராமத்தில் நடைபெறும் சம்பவத்தை மையமாகக் கொண்டு, மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவு, உயிரினங்கள் மீதான பரிவு, சமூகப் பொறுப்பு, ஒற்றுமை எனப் பல்வேறு விஷயங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது இப்படம். தனிநபர் நாயகர்களை முன்னிறுத்தும் கதைகளுக்கு மத்தியில், ஒரு சமூகமே கதையின் நாயகனாக மாறும் விதத்தில் ‘கூடு’ உருவாகியிருப்பது இதன் தனிச்சிறப்பு.

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜோயல் விஜய். தமிழ்நாட்டின் கிராமிய வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், நகைச்சுவை, உணர்ச்சிகள் மற்றும் யதார்த்தமான மனிதர்களின் வாழ்க்கை என அனைத்தும் இயல்பான திரைக்கதை வழியாகச் சொல்லப்பட்டுள்ளன.

VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, சார்லஸ் வினோத், அனிதா சம்பத், சசி செல்வராஜ், திராவிட் செல்வம், VJ ஆஷிக் மற்றும் தனலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, டேவிட் வில்லியம்ஸ் கதை எழுதியுள்ளார். கதையின் உணர்வுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் பாடல்களும் பின்னணி இசையும் அமைக்கப்பட்டுள்ளன.

திரைப்படம் குறித்த தயாரிப்பாளர்களின் கருத்துகள்:

பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் குமார் மங்கட் பதக் கூறுகையில்,

“‘கூடு’ ஒரு வித்தியாசமான கதை. இதுபோன்ற திரைப்படங்களுக்குத் தேவையான சரியான தளம் IFFI என்று நம்புகிறேன். பல்வேறு வகையான திரைப்படங்களை ரசிக்கும் பார்வையாளர்கள் இந்த விழாவில் ஒன்றிணைகிறார்கள். அவர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும், படம் குறித்த நேர்மறையான கருத்துகள் பரவலாகச் சென்றடையும் என்றும் நம்புகிறேன். இயக்குநர் ஜோயல் விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

மற்றொரு தயாரிப்பாளரான அபிஷேக் பதக் கூறும்போது,

“இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே அதன் எளிமைதான். ஒரு தனி மனிதனின் கதையாக இல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் உணர்வுகளையும் இப்படம் பேசுகிறது. இதுபோன்ற கதைகள் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைவதற்கு IFFI சிறந்த வாய்ப்பாக இருக்கும். விழாவில் படம் பார்ப்பவர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், திரையரங்குகளில் வெளியாகும்போது மேலும் பலரைச் சென்றடையும் என்றும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் எம். கணேஷ் கூறுகையில்,

“‘கூடு’ திரைப்படத்துடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் இது பெருமையான தருணம். அன்பு, ஒற்றுமை, ஒரு சமூகத்தின் அடையாளமாக விளங்கும் நல்ல முடிவுகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் திரைப்படம் இது. IFFI பார்வையாளர்களுடன் இந்தப் படத்தின் பயணத்தைப் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்” என்றார்.

கல்ட் டிஜிட்டல் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறும்போது,

“மொழிகளைக் கடந்து அனைவரது மனங்களையும் தொடக்கூடிய கதை ‘கூடு’ என்பதில் எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருந்தது. IFFI-ன் காலா பிரீமியர் பிரிவில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற அங்கீகாரம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகைய புகழ்பெற்ற திரைப்பட விழாவில் எங்கள் படத்தைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

தனது முதல் திரைப்படத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் குறித்து இயக்குநர் ஜோயல் விஜய் கூறுகையில்,

“முதல் கதையை எழுதத் தொடங்கியதிலிருந்து படத்தின் இறுதிக்காட்சி திரையில் பதிவாகும் வரை, ‘கூடு’ திரைப்படத்தின் பயணம் நம்பிக்கை, விடாமுயற்சி, உறுதி ஆகியவற்றால் நிறைந்தது. ஒரு கட்டத்தில் திரையில் சாத்தியமாகுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திய கதை, இன்று இந்தியாவின் முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான IFFI-ல் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இப்படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்குமானது. நாங்கள் நம்பிக்கையுடன் உருவாக்கிய கதைக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்” என்றார்.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் ‘கூடு’!

பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், எம். கணேஷ், சுனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி மற்றும் லிஷா பி. சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன் இணைத் தயாரிப்பாளராகவும், அபிநவ் மெஹ்ரோத்ரா படைப்புத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கத்தில், மனோஜ் கிருஷ்ணா இசையில் உருவாகியுள்ள ‘கூடு’ திரைப்படம், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தின் காலா பிரீமியர் திரையிடல் நடைபெறவுள்ளது.

ஒரு கிராமத்தின் சிறிய முடிவுக்குப் பின்னால் இருக்கும் பெரிய மனிதநேயத்தைப் பேசும் ‘கூடு’, தமிழ்த் திரையுலகின் கவனத்தை மட்டுமின்றி, தேசிய அளவிலான திரைப்பட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கத் தயாராகி வருகிறது.

A Village Stands Up for Birds! Tamil Film ‘KOODU’ Earns a Prestigious Spot at 57th IFFI Goa

The Joyal Vijay directorial becomes the only Tamil film selected for the Gala Premiere Feature Film section at the International Film Festival of India; worldwide theatrical release planned for early 2027.

A story about a village, a rare species of birds and an extraordinary act of collective humanity is now set to reach one of India’s most prestigious cinematic platforms. Tamil feature film ‘KOODU’, presented by Panorama Studios in association with Skymoon Entertainment and Cult Digital, has been officially selected for the Gala Premiere Feature Film section at the 57th International Film Festival of India (IFFI), to be held in Goa.

Adding to the achievement, KOODU is the only Tamil film selected for the Gala Premiere Feature Film section this year, marking a significant recognition for the film’s team and contemporary Tamil cinema.

At the heart of KOODU is an unusual yet thought-provoking situation. When a rare species of birds builds its nest inside an electrical transformer in a village, the local community faces an unexpected challenge. Instead of looking at the situation as merely a practical problem, the villagers make an extraordinary decision that puts the safety of the birds at the centre of their concerns.

What follows is an emotionally engaging story about compassion, environmental responsibility and the delicate relationship between human beings and nature.

At a time when mainstream cinema often revolves around individual heroes, KOODU takes a different approach by placing an entire community at the centre of its narrative. The film explores how ordinary people, united by a common purpose, can demonstrate extraordinary courage and bring about meaningful change.

Marking the feature directorial debut of Joyal Vijay, the film is set against the rural landscape and cultural backdrop of Tamil Nadu. Blending humour, warmth and emotional honesty, the narrative celebrates the quiet strength of ordinary people and the power of collective humanity.

The film features an ensemble cast comprising VJ Kathirravan, Jayaprakash, Vivek Prasanna, Devika Satheesh, Rachitha Mahalakshmi, Namo Narayana, Sha Ra, Charles Vinod, Anitha Sampath, Sasi Selvaraj, Dravid Selvam, VJ Ashiq and Thana Lakshmi.

Music for the film has been composed by Manoj Krishna, while David Williams has written the story. The songs and background score are expected to further enhance the emotional depth of the narrative.

Producers Share Their Thoughts on the IFFI Selection

Speaking about the film’s selection, Kumar Mangat Pathak, Producer, Panorama Studios, said:

“KOODU is a unique story, and I believe IFFI is the right platform for a film like this. The festival brings together audiences who appreciate different kinds of cinema. I am confident that the film will find its audience here and generate positive word of mouth. I am happy that Joyal and the entire team are getting this opportunity.”

Abhishek Pathak, Producer, Panorama Studios, said:

“What makes KOODU special is its simplicity and the way it tells the story of an entire community. IFFI offers a wonderful opportunity for such stories to reach beyond their immediate audience. I hope the film connects with audiences at the festival and encourages more people to discover it when it releases in theatres.”

M. Ganesh, Producer, Skymoon Entertainment, expressed his happiness over the recognition, saying:

“This selection is a proud moment for everyone associated with KOODU. At its heart, the film is about kindness, togetherness and the choices that define a community. We look forward to sharing this special journey with audiences at IFFI.”

Aditya Joshi, Producer, Cult Digital, said:

“We have always believed that KOODU has the power to move audiences beyond language. Being the only Tamil film selected for the Gala Premiere Feature Film section at IFFI makes this recognition even more special. We are honoured to share this story with audiences on such a prestigious platform.”

Director Joyal Vijay, reflecting on the film’s journey and its selection, said:

“From the first draft on paper to the final frame on screen, the journey of KOODU has been one of conviction, perseverance and belief. What began as a story that once seemed impossible to bring alive has now found its place on one of India’s most prestigious cinematic platforms — IFFI. This recognition is a deeply special moment for the entire team and a celebration of the story we believed in.”

An Ensemble Production Backed by Leading Banners

KOODU is presented by Panorama Studios in association with Skymoon Entertainment and Cult Digital.

The film is produced by Kumar Mangat Pathak, Abhishek Pathak, M. Ganesh, Suunil Jaiin, Aditya Joshi and Lisha P. Chandran. Rajesh Menon serves as the co-producer, while Abhinav Mehrotra is the Creative Producer.

Directed by Joyal Vijay, with music composed by Manoj Krishna and story by David Williams, KOODU is scheduled for a worldwide theatrical release in early 2027.

Ahead of its theatrical release, the film will have its Gala Premiere at the 57th International Film Festival of India in Goa.

With a simple yet powerful premise rooted in compassion, environmental awareness and community spirit, KOODU is now preparing to take its distinctly Tamil story to a wider national and international audience.