மின்மாற்றிக்குள் கூடு கட்டிய பறவைகள்… இயற்கையைக் காக்க ஒன்றிணைந்த கிராமம்! கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படமான ‘கூடு’வுக்கு சிறப்பிடம்!
மின்மாற்றிக்குள் கூடு கட்டிய பறவைகள்... இயற்கையைக் காக்க ஒன்றிணைந்த கிராமம்! கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படமான ‘கூடு’வுக்கு சிறப்பிடம்!
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் காலா பிரீமியர் பிரிவில் தேர்வான ஒரே தமிழ்ப் படம் – 2027 தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
இயற்கையின் மீது மனிதர்கள் காட்டும் அக்கறையும், ஒரு சமூகத்தின் ஒற்றுமையும் எத்தகைய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு சுவாரசியமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறது ‘கூடு’ (KOODU) திரைப்படம். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.
இந்த ஆண்டு இப்பிரிவில் தேர்வாகியுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும் ‘கூடு’ பெற்றுள்ளத...
