Tuesday, October 27
Shadow

விவேகம் ஃபர்ஸ்ட் லுக் இந்தியளவில் மாஸ் காட்டும் அஜித் மற்றும் ரசிகர்கள்

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஒரு வருடமாக அஜித் ரசிகர்கள் அஜித் பட விருந்துக்காக காத்திருகிறார்கள் இவர்களுக்கு தற்போது கிடைத்து இருப்பது விவேகம் படத்தின் புதிய பட புகைப்படங்கள் இந்த புதிய புகை படங்களில் அஜித் இதுவரை இல்லாத மிகவும் மாஸ் ஆக இருக்கிறார்,இதுவரை கோட் சூட் என்று இருந்த அஜித் இந்த படத்தில் முற்றிலும் மாறாக சிக்ஸ் பேக் டி ஷர்ட்ஸ் என்று மிகவும் மிரட்டலாக வருகிறார் அதிவும் தற்போது வெளியாகி இருக்கும் புகை படத்தில் இருக்கும் படத்தில் நின்ஜா வைத்து கொண்டு வந்து இருக்கும் ஸ்டில்ஸ் மேலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது நிச்சயம் தல மிக பெரிய மாஸ் காமிப்பார் என்று கோடம்பாக்கம் வட்டம் கிசுகிசுக்கிறது .
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் இந்திய அளவில் தற்போது அதிகம் RT மற்றும் லைக்ஸ் வாங்கிய ஃபர்ஸ்ட் லுக் என பெயர் பெற்றுள்ளது.

Leave a Reply