
“கொலையாளி அல்ல… காதலன்!” – ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
ரோஜாப்பூ, துப்பாக்கி, அனல் பறக்கும் பார்வை… காதலும் ஆக்ஷனும் கலந்த மாறுபட்ட அவதாரத்தில் ஷாருக்கான்!
பாலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படம், அதன் புதிய போஸ்டர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. “கொலையாளி அல்ல… நான் காதலன்!” என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தில் ஷாருக்கான் ஏற்கவிருக்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கைகளில் துப்பாக்கி, கண்களில் தீவிரம் என முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் ஷாருக்கான் காட்சியளிக்கிறார். காதலின் மென்மையையும் ஆக்ஷனின் தீவிரத்தையும் ஒரே தோற்றத்தில் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, காதலன் என்ற அடையாளத்தையும் அதிரடி நிறைந்த தோற்றத்தையும் இணைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானுடன் சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நடிகை கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் மற்றும் சச்சின்–ஜிகர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு கௌரி கான், சித்தார்த் ஆனந்த் மற்றும் மம்தா ஆனந்த் ஆகியோர் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘கிங்’ திரைப்படத்தின் மீது ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான்–சித்தார்த் ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இப்படத்தின் மூலம் முழுநீளத் திரைப்படத்தில் அறிமுகமாவதும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
புதிய போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஷாருக்கானின் இந்த வித்தியாசமான அவதாரம் திரையில் எத்தகைய அனுபவத்தை வழங்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“I’m Not a Killer… I’m a Lover!” Shah Rukh Khan’s New King Poster Creates a Buzz
A rose between his lips, a gun in his hand, and fire in his eyes — Shah Rukh Khan strikes a striking balance between romance and action!
Bollywood superstar Shah Rukh Khan has once again grabbed the spotlight with the release of a new poster from his highly anticipated film King. Featuring the powerful tagline, “I’m Not a Killer… I’m a Lover!”, the poster has heightened curiosity among fans about the actor’s character and the film’s intense storyline.
The new poster showcases Shah Rukh Khan in a strikingly different avatar, with a rose between his lips, a gun in his hand, and an intense, fiery gaze. Blending the tenderness of romance with the raw energy of action, the visual has captured the attention of fans and sparked speculation about the character he plays in the film. The intriguing contrast between the image of a lover and his formidable appearance has further added to the excitement surrounding the project.
Directed by Siddharth Anand, King features an ensemble cast comprising Shah Rukh Khan, Suhana Khan, Abhishek Bachchan, Deepika Padukone, Anil Kapoor, Rani Mukerji, and Jackie Shroff, among others. Actress Kareena Kapoor is also reported to appear in a special role.
The action thriller is being produced on a grand scale by Red Chillies Entertainment and Marflix Pictures, with Gauri Khan, Siddharth Anand, and Mamta Anand serving as producers. Sachith Paulose is handling the cinematography, while Anirudh and Sachin–Jigar are collaborating on the film’s music.
Scheduled for a worldwide theatrical release on December 24, King has already generated considerable anticipation among audiences. The reunion of Shah Rukh Khan and Siddharth Anand following the success of Pathaan has added to the film’s appeal. The project has also drawn attention as it marks Suhana Khan’s big-screen debut in a full-length feature film.
With the latest poster adding another layer of intrigue, fans are eagerly awaiting the opportunity to witness Shah Rukh Khan’s intense new avatar on the big screen. The film’s blend of action, romance, and larger-than-life storytelling has made King one of the most anticipated Bollywood releases.
