
சிம்பு என்றாலே வம்பு தான் சிம்புவை வைத்து படம் எடுத்த எந்த இயக்குனரும் சரி தயாரிப்பாளரும் நிம்மதி என்றால் என்ன என்று தான் கேட்பார்கள். காரணம் அந்த அளவுக்கு எல்லா தயாரிப்பலரும் கண்ணீர் விடவைப்பது அவரின் வேலை தற்போது அந்த லிஸ்டில் இருப்பவரை பாப்போம்.
ஏற்கனவே ‘காளை’, ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என மூன்று படங்களால் நொந்து போயுள்ள நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்கு பிறகு அதிகம் பாதிக்கப்பட்டவர் இயக்குனர் பாண்டிராஜ்.
இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த காலங்களில் சரியான முறையில் ஒத்துழைத்து வந்த சிம்புவால் அதன் பிறகு கொடுத்த கால்ஷீட்டை காப்பாற்ற முடியவில்லையாம்.
சமீபத்தில் படப்படிப்பிற்காக இருபது நாட்கள் பாங்காங் சென்ற குழுவினர் கொண்டு வந்தது என்னவோ இரண்டே நாட்களின் புட்டேஜ்தானாம். சிம்புவை கைகாட்டிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் பாங்காக் ஷெட்யூலை கேட்க, கடுப்பான தயாரிப்பாளர் ‘’எப்படியாவது இந்தியாவிற்குள்ளேயே சூட்டிங் செய்து படத்தை முடித்துவிடுங்கள்’’ என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
