Sunday, April 19
Shadow

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்ட அறிவிப்பு — “மகா அவதார் பரசுராம்” பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்ட அறிவிப்பு — “மகா அவதார் பரசுராம்” பர்ஸ்ட் லுக் வெளியீடு

பரசுராம ஜெயந்தியின் புனிதமான நாளை முன்னிட்டு, இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தனது அடுத்த மிகப்பெரிய முயற்சியான “மகா அவதார் பரசுராம்” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து தரமும், தொழில்நுட்பமும், கதை சொல்லும் முறைமையும் ஆகியவற்றில் புதிய உயரங்களை உருவாக்கி வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்திய மகா அவதார் நரசிம்மா போன்ற வெற்றி படங்களின் மூலம் இந்திய திரைத்துறையில் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளது.

இந்த வெற்றிப் பயணத்தை தொடர்ந்தும், “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்” எனும் பெரும் கனவுத் திட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக “மகா அவதார் பரசுராம்” உருவாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். மேலும், க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2027 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த திரைப்படம், பார்வையாளர்களுக்கு இதுவரை காணாத அளவிலான பிரம்மாண்ட காட்சி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிமேஷன் மற்றும் அனிமாட்டிக் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், நவீன சினிமா தொழில்நுட்பத்தையும் நம் பாரம்பரிய பண்பாட்டு செல்வங்களையும் ஒருங்கிணைக்கிறது. விஷ்ணுவின் அவதாரங்களை அடிப்படையாகக் கொண்ட காலமற்ற புராணக் கதைகளை புதிய தலைமுறைக்கு உயிரோட்டமாக கொண்டு சேர்க்கும் முயற்சியாக இது அமைகிறது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகும் தருணத்திலேயே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வேர்களோடு இணைந்த சக்திவாய்ந்த கதைகளையும், உலகத் தரத்திலான காட்சிப் பெருவிழாவையும் வழங்கும் தனது பயணத்தில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

“மகா அவதார் பரசுராம்” — இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட அத்தியாயம்!

 

Hombalet Films Unveils Its Next Magnum Opus — “Mahavatar Parashuraam” First Look Released

Marking the auspicious occasion of Parashuram Jayanti, one of India’s leading production houses, Hombale Films, has officially announced its next ambitious project, “Mahavatar Parashuraam.”

Known for consistently pushing the boundaries of cinematic scale, technology, and storytelling, Hombale Films has carved a distinct identity in Indian cinema with blockbuster successes like Rajakumara, KGF, Kantara, Salaar, and most recently Mahavatar Narasimha.

Taking this legacy forward, “Mahavatar Parashuraam” emerges as the next significant chapter in the studio’s ambitious Mahavatar Cinematic Universe. The film will be directed by Ashwin Kumar and is being produced in collaboration with Kleem Productions.

Scheduled for a worldwide release in December 2027, the film promises to deliver a grand and immersive visual spectacle unlike anything seen before.

Designed as an animatic cinematic experience, the film aims to seamlessly blend cutting-edge technology with the richness of India’s cultural heritage. It seeks to bring to life timeless mythological legends inspired by the avatars of Vishnu, reimagined for a new generation of audiences.

With excitement already building among fans, this announcement marks yet another milestone in Hombale Films’ journey of delivering powerful, rooted, and visually stunning cinema.

“Mahavatar Parashuraam” — The Next Epic Chapter in Indian Cinema!