Monday, April 20
Shadow

ஆன்லைன் வர்த்தகத்தை மையகருத்தக வைத்து வளரும் படம் “ விளையாட்டு ஆரம்பம் “

கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ விளையாட்டு ஆரம்பம்.

இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஜா நடிக்கிறார். இந்த படத்துக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு அருன் மொழி சோழன் இந்த படத்தை இரட்டை இயக்குனர்கள் விஜய் R ஆனந்த் மற்றும் A.ர்.சூரியன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள்.

சதுரங்க வேட்டை மாதிரியான படம்.ஆனால் சதுரங்க வேட்டை ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்மறையான விஷயங்களை பதிவு செய்தது.

ஆனால் விளையாட்டு ஆரம்பம் படத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிறைவான விஷயங்களை இதில் பதிய வைத்திருக்கிறோம். ஒரு நாடு வல்லரசு நாடாக உருவாக வேண்டுமானால் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஒரு காரணமாக இருக்கும் என்கிற நேர் மறையான விஷயங்கள் தான் படத்தின் மையக்கரு !
படப்பிடிப்பு மதுரை, திருச்சி, நாமக்கல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
பாடல் காட்சிகள் சென்னை, பாங்காக் போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply