
பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.
இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் வரும் 28-ம் தேதி உலகம் முழுவதும் 9000 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதன் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பதான் கர்நாடக பிரச்சனை ஓய்ந்தது அதுக்குள் தமிழ் நாட்டில் வந்து விட்டது,
பிரபல ஸ்ரீ கிரீன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ராஜராஜனிடம் இருந்து வாங்கியிருந்தது. ஆனால் பைரவா, கட்டப்பாவ காணோம், போகன் என அடுத்தடுத்து இவர்களது படங்கள் நஷ்டம் அடைந்ததால் சொன்ன தொகையை இவர்களால் தற்போது கொடுக்க முடியவில்லையாம். எனவே பாகுபலி படத்தை தமிழகத்தில் யார் வெளியிடுவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2௦ கோடி நஷ்டம் கொடுக்கவேண்டும் அப்படி கொடுத்தால் தான் தமிழ் நாட்டில் வெளியாகும் என்று பேசபடுகிறது இன்று இரவுக்குள் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
