Friday, April 12
Shadow

சூடு தாங்கல படபிடிப்பு இடத்தை மாற்ற சொன்ன விஜய்

விஜய் 61 படபிடிப்பு படுவேகமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது மேலும் பலகாட்சிகள் படமாக்கப்பட்டது இன்னும் சில நாட்கள் படபிடிப்பு இருக்கும். இந்த படத்தின் முதல் பார்வை வரும் ஜூன் மாதம் மற்றும் படம் வரும் தீபாவளி அதாவது அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் கூறினார்கள். இதனால் இந்த படத்தின் படபிடிப்பை மேலும் வேகமாக நடத்த பட குழுவினர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய படப்பிடிப்பில் வடிவேலு, விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

’விஜய் 61’ படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave a Reply