
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் டீஸர் கடந்த மே 11-ம் தேதி இணையத்தில் வெளியாகி 68 மணிநேரத்தில் 10 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது.
இதன்மூலம் அதி விரைவாக இந்த சாதனையை படைத்த டீசராக விவேகம் உருவெடுத்துள்ளது அது மட்டும் இல்லாமல் பல நாடுகளில் இந்த டிசர் முத்த இடத்திலும் சில நாடுகளில் முதல் பத்து இடங்களில் பிடித்து யு டுப் நிறுவனத்தையே திணற அடித்துள்ளது. பின்னர் இந்த டிசரை பற்றி அமெரிக்க போபர்ஸ் பத்திரிக்கை மிகவும் பாராட்டி எழுதியுள்ளது இந்த டிசர் பார்க்கும்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தின் டிசர் போல இருக்கு என்றும் பாராட்டி எழுதியுள்ளது இது இந்திய சினிமாவுக்கே பெருமை
