Monday, April 20
Shadow

நான் திருடன் என்று ஒத்துக்கொண்ட அஜித் பட வில்லன் யார் தெரியுமா

விவேக் ஓபராய் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த பாலிவுட் ஹீரோ ஏன் ஐஸ்வர்யா ராயின் முன்னால் காதலர் திருமணம் வரை இருவருக்குள் பிரிவு ஹிந்தியில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் மனிதநேயம் மிக்க ஒரு மனிதர் என்றும் சொல்லணும் தமிழகத்தில் சுனாமி வந்த போது கடலூரில் பல கிராமங்களை தத்து எடுத்து நிவாரணம் செய்தவர் அவர் செய்யும் வேலை இன்று சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை

அஜீத்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடிப்பவர் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய். இவர் ‘பேங்க்சோர்’ என்ற இந்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். இது வங்கி திருட்டு தொடர்பான கதை. இந்த படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ‘சிறு குழந்தையாக இருந்த போது நீங்கள் வீட்டில் எதையாவது திருடி இருக்கிறீர்களா? என்று விவேக் ஓப்ராயிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்….

“குழந்தையாக இருந்த போதா? இப்போது கூட வீட்டில் திருடிக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு சாக்லெட் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக , என் மனைவி பிரியங்கா என்னை சாக்லெட் சாப்பிடவிடமாட்டர். கொடுக்கவும் மாட்டார். எனவே, குழந்தைகளுக்காக என்மனைவி வாங்கி மறைத்து வைத்திருக்கும் சாக்லெட்டை நான் தேடி கண்டு பிடித்து திருடி சாப்பிடுவேன்.

சில நேரங்களில் சாக்லெட் திருடும் போது மனைவியிடம் மாட்டிக்கொள்வேன். இது பற்றி தெரிந்து கொண்ட எனது நண்பர்களான நடிகர்கள் ரித்தேஷ் தேஷ்முக், அப்தாப்ஷிவ் தசானி ஆகியோர் என்னை அடிக்கடி கிண்டல் செய்வார்கள்”.

Leave a Reply