
நடிகர் சிம்புவின் ‘AAA’ படத்துக்கு சென்சாரில் u/a சர்பிகேட் கிடைச்சுருக்குது. வரப் போற ரம்ஜான் பண்டிகை ட்ரீட்டா ஜூன் 23ஆம் தேதி ரிலீஸாக போகுது. இப்படத்துக்கான போஸ்டர்கள், ட்ரெய்லர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் ரசிகர்களுக்கு இப்படம் குறித்து டெய்லி புது புது நியூஸ் கொடுக்க ஒரு டீமை ரெடி பண்ணியிருக்கார் புரொட்யூசர் மைக்கேல் ராயப்பன்
இதுக்கிடையிலே தனியார் இணையத்தளத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொண்டு உரையாடினார். இந்நிகழ்ச்சியில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு வெளிப்படையாகப் பதில் கூறினார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுவரை வானம், தொட்டி ஜெயா, மன்மதன், போடா போடி, அச்சம் என்பது மடமையடா மாதிரி பல வித்தியாசமான திரைப்படங்களில் நடிச்சிருக்கேன். ஆனா அதுக்கென்ன 15 அவார்டு, 20 அவார்டுன்னு ஏதும் கொடுத்தாங்களா? விருதுக்காக நடிச்சு ஏமாந்து போறதைவிட ரசிகர்களுக்காக நடிச்சு இன்னும் அதிகமான ரசிகர்களைச் சம்பாதிக்கலாம்னு நினைக்கிறேன் அப்படீன்னார்.
தொடர்ந்து அவர் பேசறச்சே என்னை விரும்பாத ரசிகர்கள் பல பேர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மாதிரியான சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஆனால் ஆரம்பத்திலே இருந்த அளவுக்கு சிறப்பாக அவங்களாலே கலாய்க்க அவர்களால் முடியவில்லை என்று தெரிவித்த அவர் அவசரமா கலாய்க்க ஏன் நினைக்கறீங்க? பொறுமையா இரண்டு நாள் டைம் எடுத்து கலாய்ங்க. உங்ககிட்ட இருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன் என்றார்.
கூடவே அவங்க கலாய்ப்பதால்தான் மக்கள் ஏதோ ஒரு விஷயத்தில் தன்னைப் பற்றி சிந்தித்து வருகிறார்கள் என்றும், அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நன்மைக்கே என்றும் பெருமைப்பட்டுக் கொண்டார்.
அதுமட்டுமின்றி AAA திரைப்படம் குறித்து கேட்ட கேள்விக்கு தயவு செய்து முதல் மூன்று நாள்கள் என்னை வெறுப்பவர்கள், கலாய்ப்பதற்காக இந்தத் திரைப்படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வராதீங்க… நீங்க ஏமாந்து போவீங்க அப்படீன்னார். அப்படின்னா படம் அந்த அளவுக்கு மிகவும் பிரமாதமாக வந்து இருக்கு என்னை பிடிக்காதவர்கள் படம் பார்த்தால் அசந்துபோவார்கள் என்று சூசகமாக சொல்லுகிறார் சிம்பு
