என்னை கலாய்த்து வருபவர்களுக்கு நன்றி என் படம் AAA உங்களுக்கு பதில் தரும் – எஸ். டி .ஆர்
நடிகர் சிம்புவின் 'AAA' படத்துக்கு சென்சாரில் u/a சர்பிகேட் கிடைச்சுருக்குது. வரப் போற ரம்ஜான் பண்டிகை ட்ரீட்டா ஜூன் 23ஆம் தேதி ரிலீஸாக போகுது. இப்படத்துக்கான போஸ்டர்கள், ட்ரெய்லர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் ரசிகர்களுக்கு இப்படம் குறித்து டெய்லி புது புது நியூஸ் கொடுக்க ஒரு டீமை ரெடி பண்ணியிருக்கார் புரொட்யூசர் மைக்கேல் ராயப்பன்
இதுக்கிடையிலே தனியார் இணையத்தளத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொண்டு உரையாடினார். இந்நிகழ்ச்சியில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு வெளிப்படையாகப் பதில் கூறினார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுவரை வானம், தொட்டி ஜெயா, மன்மதன், போடா போடி, அச்சம் என்பது மடமையடா மாதிரி பல வித்தியாசமான திரைப்படங்களில் நடிச்சிருக்கேன். ஆனா ...
