
நாளுக்குநாள் பிக் பாஸ் மோகம் மக்களுக்கு அதிகம் ஆகிகொண்டேபோகிறது இதற்க்கு காரணம் ஓவியா தான் அவரின் கவர்ச்சியில்லை தமிழ் நாடகத்தில் வருவதுபோல மாமியார் மருமகள் கொடுமை செய்வது போல வரும் சம்பங்கள் தான் இது தான் முக்கிய காரணம் என்று சொல்லணும்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் ரௌண்டில் ஓவியா, கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நமிதா ஆகியோர் இருந்தனர்.
ஓவியாவுக்கு ரசிகர்களின் ஆதரவு பலமாக இருப்பதால் ஓவியா வெளியேற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் ப்ரோமோவில் வெளியேறப்போவது இவர் தான் என கமல் சொல்வது போலவும் சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் கூச்சலிடுகின்றனர்.
இதற்கு காரணம் ஏற்கனவே பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் யாரும் இல்லாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
எதுவாக இருந்தாலும் இன்று இரவு உறுதியாக தெரிந்து விடும்.
