Wednesday, October 28
Shadow

ஓவியாவுக்கு பெருகிக்கொண்டே போகும் கோலிவுட் அதரவு நேற்று சிம்பு இன்று த்ரிஷா

பிக் பாஸ் நாளுக்கு நாள் மிகவும் மக்களை கவர்ந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் அவரின் வில்லியாக சித்தரிக்கும் ஜூலி மற்றும் பிக் பாஸ் வீட்டு மக்கள் தான் ஓவியாவுக்கு எதிராக செயல் படுகிறோம் என்று இன்று ஓவியாவை மிக பெரிய இடத்துக்கு அதாவது அவர் நடித்தபோது எடுக்காத பேர் மற்றும் புகழை வாங்கி கொடுத்து விட்டார்கள் என்று தான் சொல்லணும்.

இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் அன்று ஆர்த்தி சொன்ன விஷயங்களை உண்மை, என்று நிருபித்த ஜூலி என்று தான் சொல்லணும் ஜூலி மிக பெரிய நடிகை மட்டும் இல்லை மிக மோசமான புத்தியுள்ள பெண் என்றும் நிருபித்து வருகிறாள் தன்னை காப்பாற்றி கொள்ள என்ன வேண்டும் வேணும்னாலும் செய்வார் என்று நிருபித்து வருகிறார். அன்று நாம் ஆர்த்தியை எல்லோரும் தப்பாக நினைத்து அவருக்கு எதிராக ஒட்டு போட்டு வெளியேற்றிவிட்டோம் என்று நினைக்க தோணுது கொஞ்ச வருத்தமாக இருக்கிறது.

இன்று ஓவியாவுக்கு மிகவும் கோலிவுட் நட்சத்திரங்கள் அதவரவு பெருகிவருகிறது முதலில் சிம்பு தான் அதரவு தெரிவித்தார். இப்போது மேலும் அதரவு பெருகிக்கொண்டே போகிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக த்ரிஷா நடிகர் சதீஷ் நடிகர் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் பாடகி சின்மயி இயக்குனர் வெங்கட் பிரபு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள் மட்டும் இல்லாமல் மேலும் பல நடிகர்கள் நடிகைகள் அதரவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது என்று தான் சொல்லணும்.

இதில் குறிப்பாக த்ரிஷா சொல்லி இருப்பது மிகவும் சரியான கருத்து என்று தான் சொல்லணும் ஓவியாவை மொத்த பிக் பாஸ் குடும்பத்தினர் தாக்கி வருகின்றனர் அதற்க்கு முக்கிய காரணம் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமானதே என்று தான் சொல்லணும் த்ரிஷா சொன்னது யாராக இருந்தாலும் எங்கு இருந்தாலும் ஒரு நகைசுவைக்கு கூட ஒருத்தர் மனதை ஒட்டு மொத்தமாக சேர்ந்து புண் படுத்துவது நியாம் இல்லை என்று தன் ட்விட்டர் பதிவில் ஓவியாவுக்கு அதரவு தெரிவித்துள்ளார் .

மற்றும் பலர் ட்விட்டர் கணக்கில் பதிவுகள் உங்கள் பார்வைக்கு நமீதா மேல் இருந்த மரியாதையும் மிக மோசமாக குறைந்து கொண்டு இருக்கிறது அதோடு அநேகமாக இன்றோடு அவர் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது

Leave a Reply