Sunday, April 19
Shadow

கூட்டத்தில் ஒருத்தன் திரைவிமர்சனம் (தகுதியானவன்) Rank 3.5/5

பதிரிக்கயாராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஞான்வேல்க்கு வாழ்த்துகள் . இயக்குனர் ஒரு பத்திரிக்கையாளர் என்பதற்கு சாதகாமாக ஒரு விமர்சனம் இல்லை என்று சொல்லிவிடுகிறோம்.

கூட்டத்தில் ஒருத்தன் மிக சிறந்த படம் என்று சொல்லணும் அற்புதமான அறிவுரை என்பதை விட வாழ்கையை சொல்லி இருக்கும் படம் என்று தான் சொல்லணும். இன்றைய 50% சதவீத மாணவர்களை பற்றி சொல்லும் கதை என்றும் சொல்லலாம் எல்லா பெற்றோர்களும் பார்க்கவேண்டிய படம் என்றும் சொல்லணும்

ஊக்கம் மட்டுமே வெற்றிக்கு சிறந்த மருந்து இதை பலர் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்த்தும் கதை அதோடு தன் நம்பிக்கையை வெளிபடுத்தும் கதை என்றும் சொல்லலாம். இயக்குனர் இன்றய சமுதாயத்துக்கு என்ன வேண்டும் என்பதை காதலோடு கலந்து கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் உணவு என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கும் படம் நேர்த்தியான கதை கடைசி அரை மணி நேரம் நம்மை நாமே உணர்கிறோம் உணர்த்துகிறார் இயக்குனர்.

சரி படத்தில் நடித்தவர்களை பற்றியும் கதைகளமும் பார்க்கலாம் கதையின் நாயகனாக அசோக் செல்வன் மிகவும் கதைக்கும் கதபாதிரத்துக்கும் மிக சிறந்த பொருத்தம் என்று தான் சொல்லணும்.ஒரு சராசரி மாணவன் அதாவது அவேரஜ் மாணவர் எல்லாத்திலும் நம்பர் 1 இல்லை கடைசி பெஞ்ச மாணவனாக இல்லாமல் இப்படியும் அப்படியுமாக இருக்கும் மாணவன் பாத்திரத்தை மிக பொருத்தமாக அதோடு ஒரு ஹீரோயிசம் கலந்து செமையா நடித்துள்ளார்.அசோக் செல்வன்

ப்ரியா ஆனந்த் முதல் முறையாக ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று அதில் மிக சிறந்த நடிப்பை அழகாக வெளிபடுத்தியுள்ளார் என்று தான் சொல்லணும். சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி நடிக்கவேண்டாம் என்று இருந்தேன் இந்த படத்தின் கதை கேட்டு தான் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று சொல்லி இருந்தார் அது முற்றிலும் உண்மை என்று சொல்லும் அளவுக்கு சிறந்த கதையும் சரி ப்ரியா ஆனந்தின் கதாபாத்திரமும் சரி வாழ்த்துகள்

பால சரவணன் ஒரு நல்ல நகைசுவை செய்வார் என்று நமக்கு தெரியும் அதோடு நல்லா நடிப்பார் என்று இந்த படத்தில் நிருபித்துள்ளார் அசோக் செல்வன் நண்பனாக வரும் பால சரவணன் படத்தின் மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும் அப்படி ஒரு கதாபாத்திரம் நம்மை சுற்றி இருப்பவர்கள் யாரும் நம்மை ஊக்கபடுத்த மாட்டார்கள் ஆனால் நமக்கு ஒரு நல்ல நண்பன் வந்து அதை செய்வான் அதை சிறப்பாக செய்துள்ளார்.

சமுத்திரகனி எப்பவும் போல நல்ல ஒரு கதாபாத்திரம் ஆனால் கொஞ்சம் வித்தியாசம் இதில் ஒரு மிக பெரிய தாதா ஆனால் நல்ல தாதா கெட்டவர்களை கேள்விகேக்கும் தாதா காதல் தோல்வியால் தற்கொலை செய்ய செல்லும் அசோக் செல்வன் அவருக்கு தெரியாமல் ஒரு பயனை காப்பாற்றுகிறார். ஆந்த வாய்பேசமுடியாத சிறுவன் சமுத்திரகனி மகன் இதனால் சமுத்திரகனி அசோக் செல்வன் மீது தனி பாசம் என் உயிரை காபற்றியவன் என்று பயந்து வாழும் அவரேஜ் மாணவன் அசோக் செல்வன் காதலுக்கு உதவுகிறார் இது ஒருகட்டத்தில் தவறாக முடிந்து விடுகிறது அப்போது சமுத்திரகனியை அசோக் செல்வன் கோவத்துடன் பேசிவிட்டு வந்து விடுகிறார். இதை சமுத்திரகனி மற்றும் அசோக் செல்வன் எதிரிகள் இதை பயன்படுத்தி அசோக் செல்வன் வாழ்கை மற்றும் சமுத்திரகனி வாழ்கை எப்படி மாறுகிறது என்பது தான் மீதி கதை.

இயக்குனருக்கு முதல் படம் அதோடு ஒரு பத்திரிகையாளர் என்பதையும் மனதில் வைத்து கொண்டு சமுக அக்கரையோடு ஒரு கதை அதற்கு மிக சிறந்த திரைகதை தேவை இல்லாத காட்சிகள் ஆபாசம் இல்லாமல் மிக சிறப்பாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும்.

தொடர்ந்து சிறந்த படங்களை கொடுக்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர் படத்தின் ஒளிப்பதிவு பி.கே.வர்மா இசை நிவாஸ் கே வர்மா இசையில் அருமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அதோடு கதைக்கு மிகவும் பலம் வாய்ந்த நடிகர்கள் மாரிமுத்து,ரமா,ஜான் விஜய், அனுபமா, நாசர்,மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் எல்லோரும் குடும்பத்தோடு முக்கியமாக இன்றைய இளைஞர்கள் மற்றும் எல்லா பெற்றோர்கள் பார்க்கவேண்டிய படம்

மொத்ததில் கூட்டத்தில் ஒருத்தன் தனி ஒருவன் Rank 3.5/5

Leave a Reply