தமிழ் திரையுலகில் எப்போதுமே ஒரு படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பே, அதன் இசை உரிமையை பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு கைப்பற்றி விடுவார்கள். அந்நிறுவனத்தின் சமூகவலைதள பக்கங்களில் தான் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் உருவான விதம் உள்ளிட்ட வீடியோ பதிவுகள் வெளியாகும்.
வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘மீசையமுறுக்கு’ திரைப்படம் வெளியாகும் வரை, அதன் இசை உரிமையை தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மியூசிக்’கிடம் இருந்தது. மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இசை உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இது தமிழ் திரையுலகில் முதல் முறையாகும்.
இசை உரிமையை விற்றதன் மூலமும் ஒரு வருமானம் படக்குழுவுக்கு கிடைத்துள்ளது. தொலைக்காட்சி உரிமையையும் பெரும் விலைக் கொடுத்து சன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான ‘மீசையமுறுக்கு’ படத்தில் விவேக், ஆத்மிகா, மனிஷா, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்துள்ளார்கள்.
