
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான ஹீரோ என்று சொல்லலாம் அதோடு மிக திறமையான நடிகர் என்றும் சொல்லணும் தமிழ் சினிமாவில் இவரின் வளர்ச்சி மிக அபரிதமான வளர்ச்சி என்றும் சொல்லலாம் அப்ப பட்ட விஜய் சேதுபதியின் கருப்பன் படம் ரிலீஸ்க்கு தயார் நிலையில் உள்ளது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன்,சிங்கம்புலி, மற்றும் பலர் நடிக்க பிரமாண்ட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் தயாரிக்க இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியாகும் இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது
இந்த பிரஸ் மீட்யில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி இந்த படம் உருவான கதை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பற்றியும் பேசினார் அப்போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விஜய் சேதுபதி சமீபத்தில் ஒருவரின் விமர்சனம் மிகவும் மோசமாக இருந்தது அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது விமர்சனம் என்பது முக்கியம் விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும்தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது…” என பேசினார் நாயகன் விஜய் சேதுபதி.
