Sunday, April 19
Shadow

விஜய்யின் மெர்சல்லுடன் தைரியமாக மோதும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

தமிழ் சினிமா டாப் நடிகர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர் விஜய் இவர் படங்கள் ரிலீஸ் என்றால் மற்ற நடிகர்கள் படங்கள் தான விலகிகொள்ளவார்கள் காரணம் பயம் ஒரு பக்கம் திரையரங்கம் கிடைக்காது என்பது ஒரு பக்கம் அதோடு ரிலீஸ் மற்றும் இல்லாமல் தயாரிப்பில் கிங் வினியோகிஸ்தர் கிங் என்று சொல்லப்படும் தேனாண்டாள் பிலிம்ஸ் வேறு இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்பதால் எல்லோரும் விலகிவிடுவார்கள்

இந்த சூழ்நிலையில் தற்போது சிவகார்திகேயன், நயன்தாரா கூட்டணியில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாக இருந்தது, ஆனால் தற்போது படம் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வேலைக்காரன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, படத்தின் மீது நம்பிக்கை அதிகமாக உள்ளதால் சிவாவும் இதற்கு ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதோடு மெர்சல் ஏற்கனவே 800 திரையரங்குகள் புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அப்ப வேலைக்காரன் படத்துக்கு 300 திரையரங்குகள் தான் மிச்சம் உள்ளது.

Leave a Reply