Wednesday, October 28
Shadow

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ரீ என்ட்ரி கொடுக்க போகும் ஓவியா !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக உலக அளவில் பேமஸ் ஆகிவிட்டார் ஓவியா, காரணம் இவரது சுட்டி தனமான செயல்களும், புறம் பேசாத குணமும் தான் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

பின்னர் ஒரு சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறி விட்டார், இதனையடுத்து இவரிடம் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் இவர் ரி-என்ட்ரி கொடுக்க ஒப்பு கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இதனையடுத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் 100-வது நாளை எட்ட உள்ளது.

இதனால் 100-வது நாள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓவியா ஆசைப்படுவதாகவும் இதனை பிக் பாஸ் குழுவினரிடம் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ஓவியா நிச்சயம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply