Sunday, June 28
Shadow

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் வஞ்சகம் கொதித்த சுஜா சினேகன் முகத்திரையை கிழிந்தது

பிக் பாஸ் வீட்டில் நேற்று கொஞ்சம் கலகலப்பு அதோடு கொஞ்சம் சோகம் இரண்டும் மாறி மாறி இருந்தது என்று தான் சொல்லணும் சந்தோசம் கமல் ஹாசன் நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்தது அதில் போலியான வேஷம் போட்ட சினேகன் மற்றவர்கள் அவர்கள் அவர்களாக இருந்தார்கள் சுஜாவும் கொஞ்சம் போலியாக தான் இருந்தார் தேவையில்லாமல் சென்டிமென்ட் காண்பித்தார். இந்த சென்டிமென்ட் தான் இவரின் தோல்வியை நிர்னைக்கும் என்று தெரியவருகிறது

பின்னர் எலிமனஷன் இதில் வெளியேறிய வையாபுரி பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேஷம் எதுவும் போடாமல் மிகவும் சாதரணமாக வீட்டை விட்டு வந்தார் ஆனால் உண்மையில் மிகவும் கலங்கியது என்றால் அது பிந்து மட்டும் தான் மற்றவர்கள் எல்லாம் மிகவும் போலியாக தான் இருந்தார்கள், குறிப்பாக சினேகன் தனக்கு இருந்த ஒரு கடுமையான போட்டியாளர் வீட்டைவிட்டு போய்விட்டார் என்ற சந்தோசம் அவரிடம் தெரிந்தது.

அதோடு நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த கொடுமை என்னவென்றால் அது பிக் பாஸ் கமல் கோல்டன் டிக்கெட் சினேகனுக்கு கொடுத்தது மிக அநியாயம் என்று தான் சொல்லணும் காரணம் மிகவும் திறமையாக ஆடிய பிந்து ஆரவ் இவர்களுக்கு கொடுக்காமல் போங்கு ஆடம் ஆடிய சினேகனுக்கு கொடுத்தது மிக கொடுமை அநியாயம் அதோடு மிக பெரிய வஞ்சகம் என்று தான் சொல்லணும் .

நேற்று வையாபுரி வீட்டை விட்டு வெளியேறியதும் எல்லோரும் மிக சோகமாக இருந்தபோது சிநேகனிடம் சுஜா பேசிய வார்த்தைகள் மிகவும் சபாஷ் சொல்லும் அளவுக்கு அதேபோல் சினேகனுக்கு சவுக்கடி கொடுத்தது போலவும் இருந்தது எதற்கு சும்மா நடிகிரிங்க கொஞ்ச நேரம் அழுறது அப்புறம் தூங்கபோறது பின்னர் மீதும் நாளைக்கு காலைல இவரை நான் எலிமனஷன் செய்றேன் சொல்லுறது பின்னர் மீண்டும் பொய்யாக பழகுவது அடுத்த வாரம் வந்தவுடன் மீண்டும் நாடகம் எதுக்கு என்று மிகவும் ஆவேசமாக கூறினார்.

இந்த இருவருக்கும் இன்று நடக்கும் சண்டையில் உச்சகட்ட சண்டை சினேகன் நடத்தும் தொடர் அழுகுணி ஆட்டம் இதனால் கொதிக்கும் சுஜா இன்று பிக் பாஸ் வீட்டில் பல பூகம்பம் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

Leave a Reply