Tuesday, October 27
Shadow

மெர்சல் டைட்டில் சிக்கல் ஏற்பட முக்கிய காரணம் யார் தெரியுமா?

விஜய்யின் மெர்சல் டைட்டில் பறிபோக முக்கிய காரணம் யார் தெரியுமா பிரபல காமெடி நடிகர் தான் முக்கிய காரணம் விஜய் படத்துக்கு டைட்டில் உக்கியம் இல்லை விஜய் பெயரும் விஜயும் தான் இருந்தாலும் இந்த டைட்டில் மெர்சல் என்ற வார்த்தைக்கு அழகு கூடியது காரணம் என்றால் அது விஜய் படத்தின் டைட்டில் ஆன பின் தான் மீண்டும் இந்த டைட்டில் வருமா என்பதை பார்ப்போம்

விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக ஏ.ஆர்.ராஜேந்திரன், என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, படத்திற்கு இடைக்கால தடையும் வாங்கிவிட்டார்.

முகம் தெரியாத இந்த ராஜேந்திரன், தான் தயாரிக்க இருந்த ‘மெர்சலாயிட்டேன்’ படம், விஜயால் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, என்றும் நீதிமன்ற மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில், அறிமுக நடிகர் ஒருவர் இருப்பது போன்ற போஸ்டரையும் பத்திரிகையாளர்களுக்கு பி.ஆர்.ஓ மூலம் ராஜேந்திரன் அனுப்பியுள்ளார்.

அதில், கென் மீடியா கருணாஸ் வழங்கும் என்ற வாக்கியம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரணம், இந்த கென் மீடியா காமெடி நடிகரும், அதிமுக எம்.எல்.ஏ-வுமான கருணாஸின் நிறுவனமாகும்.

எனவே, விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு, மூல காரணம் நடிகர் கருணாஸாக இருப்பாரோ!, என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply