Sunday, April 26
Shadow

விஜய்க்கு யு டுப் கொடுத்த பட்டம் என்ன தெரியுமா தெரிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் தான் சொன்னதை செய்பவர்கள் என்று விஜய்க்கு உணர்த்தியவர்கள் ஆம் மெர்சல் சாதனை மிக பெரிய ளவில் இருக்கும் என்று சபதம் எடுத்து மெர்சல் இசை முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் இவை அனைத்தும் இன்று ஒரு சரித்திர சாதனை என்று தான் சொல்லணும். இதனால் ட்விட்டர் விஜய் மெர்சல் படத்துக்கு கொடுத்த கெளரவம் நாம் அறிவோம் இப்ப யு டுப் கொடுத்த கெளரவம் என்ன தெரியுமா.

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் மற்றும் நித்யா மேனன் ஆகியோரும் மிரட்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கே இது மிரட்டலான மெகா மாஸ் படம் என அனைவருக்கும் உணர்த்தி விட்டது, இதனையடுத்து வெளியான டீஸர் அதை விட பல மடங்கு ரசிகர்களை மெர்சலாக்கி விட்டது.

இந்த டீசர் யூ ட்யூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கொண்டு இடைவிடாது பல நாடுகளில் ட்ரெண்டாகி வருகிறது, இதனை பற்றி யூ ட்யூப் நிறுவனம் தளபதிக்கு எபிக் தளபதி என்ற புதிய பட்டத்தை கொடுத்துள்ளது.

இதனை தற்போது தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றிக்கு விஜய் எந்த அளவுக்கு முக்கிய காரணமோ அந்த அளவுக்கு விஜய் ரசிகரகளுக்கும் சேரும் என்பதில் மாற்று கருத்தி இல்லை

Leave a Reply