Wednesday, October 28
Shadow

விஜய்யின் “மெர்சல்” காட்சிகள் ரத்து, ரசிகர்கள் கோபம்

மெர்சல் விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமலும் பெண்களும் கொண்டாடி வருகிறார்கள் மக்களுக்கு இன்றைய அரசியல் வசனங்களும் விஜய்யின் தைரியமும் மிகவும் கவர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு ஊரில் நம் தளபதி படத்தின் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

படத்தின் நீளம் ஒரு மைனஸ் என்றாலும் ரசிகர்கள் கொண்டாடி தான் வருகின்றனர், இந்நிலையில் பெங்களூரில் மெர்சல் படத்திற்கு பிரமாண்ட கட்-அவுட் வைத்து விஜய் ரசிகர்கள் அசத்தினர்.

ஆனால், சில கன்னட அமைப்பினர்கள் தமிழ் படத்தை இங்கு திரையிடக்கூடாது என விஜய் கட்-அவுட்டை உடைக்க தொடங்கினர், அதை தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கும், அவர்களுக்கும் சண்டை முற்றியது.

உடனே காவல்த்துறையினர் அங்கு வந்து பேசி இரு தரப்பை சமாதானப்படுத்தினர், அதை தொடர்ந்து மெர்சல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது, இவை விஜய் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply