
தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் கிடுகிடுவென வளர்ந்தவர் சிவா கார்த்திகேயன், இவருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 24AM சினிமாஸ் தயாரித்து வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் சிங்கள் ட்ராக் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது, இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் வெளியாக உள்ளது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்துடன் சிங்கள் ட்ராக்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
