
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படம் அவ்வளவாக வெற்றியை கொடுக்கவில்லை.
இதனால் தன்னுடைய அடுத்த படத்தில் சிவாவுடன் இணைய அஜித் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் சேதுபதி, மாதவனை வைத்து விக்ரம் வேதா என்ற மெஹா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர்களான புஷ்கர் காயத்ரியுடன் தான் அடுத்த படத்தில் அஜித் இணைய திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது.
இவர்களின் கதையை கேட்டு விட்டு தன இறுதி கட்ட முடிவு எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளாராம் தல அஜித். ஒரு வேளை இவர்களின் கதை அஜித்திற்கு பிடிக்காமல் போனால் சிவாவுடன் மீண்டும் இணைவார் என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பையும் அஜித் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
