Wednesday, October 28
Shadow

விஜய் தன் அம்மா மனைவிக்காக என்ன என்ன செய்கிறார் தெரியுமா ?

அவர்கள் நடித்த படங்களில் இருந்தல்ல, நிஜ வாழ்க்கையில், தங்கள் துணை, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இவர்கள் இருவரும் எப்படி நடந்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் நாம் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு ஸ்பெஷல் தொகுப்பு…

பெரும்பாலும் நாம் அஜித், விஜயிடம் இருந்து ஸ்டைல், டான்ஸ், நடிப்பு போன்றவற்றை தான் கண்டிருப்போம், ரசித்திருப்போம், சிலர் அவரிகளிடம் இருந்து நடிப்பு, டான்ஸ் போன்றவற்றை கற்றும் இருப்பார்கள். ஆனால், விஜய் மற்றும் அஜித்திடம் இருந்து ரிலேஷன்ஷிப் சார்ந்த சில டிப்ஸ் கூட கற்றுக் கொள்ளலாம்.

அவர்கள் நடித்த படங்களில் இருந்தல்ல, நிஜ வாழ்க்கையில், தங்கள் துணை, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இவர்கள் இருவரும் எப்படி நடந்துக் கொள்கிறார்கள். அதன் மூலம் நாம் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு ஸ்பெஷல் தொகுப்பு…

வருடத்திற்கு ஒரு முறையாவது மனைவி, குழந்தைகளுடன் லண்டன் ட்ரிப் சென்றுவிடுவார் விஜய். அங்கே தனது மனைவி சங்கீதாவின் வீட்டில் ஓய்வெடுத்து, அங்கிருந்து மகன் சஞ்சயின் திட்டத்தின் படி பிற இடங்களுக்கு பயணம் தொடருமாம்.

டிப்ஸ்: நீங்கள் எவ்வளவு பெரிய வேலை, தொழில் செய்துக் கொண்டிருந்தாலும், குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் சம்பாதித்து கொடுக்கும் பணத்தை விட, நீங்கள் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் தான் உங்களை ஒரு சிறந்த குடும்ப தலைவனாக திகழ செய்யும்.

மேலும், நீங்கள் குடும்பத்துடன் செல்லும் சின்ன சின்ன பிக்னிக் உறவில் இறுக்கம் பெருகவும், உங்கள் மனம், உடல் மற்றும் உறவின் ஆரோக்கியம் பெருகவும் உதவும்

படத்தின் ஷூட்டிங் காரணமாக எந்த இடத்திற்கு சென்றிருந்தாலும், தனது பிறந்தநாளின் போது அம்மா மடி அருகே வந்துவிடுவார் விஜய். ஒருபோதும் இதை விஜய் தவறியதே இல்லை. அந்த நாள் முழுக்க அம்மா உடனே தான் இருப்பார்.

டிப்ஸ்: வாழ்க்கை என்பது பணமீட்டுவது மட்டுமல்ல. நல்ல நினைவுகளை மீட்டுவது. நல்ல நாள், விஷேச நாட்களில் கூட நமக்கு பிடித்தவர்களுடன், நம்மை விரும்பும் நபர்களுடம் செலவிட முடியாத வேலை, தேவையே இல்லை. வெறும் பணத்தால் நினைவுகளை வாங்கிட முடியாது. உடன் நல்ல உறவுகளும் இருக்க வேண்டும்.

நான்-வெஜ் உணவுகள் என்றால் விஜய்க்கு மிகவும் பிரியம். அதிலும், அம்மா சமைக்கும் அசைவ உணவுகளுக்கு பெரிய ரசிகர். டயட்டை கடினமாக கடைப்பிடிக்கும் விஜய், அம்மாவின் அசைவ சமையலின் போது மட்டும், டயட்டை கொஞ்சம் தளர்த்தி கொள்வாராம்.

டிப்ஸ்: நீங்கள் ஹோட்டலில் சாப்பிடும் உணவிற்கும், அம்மா, மனைவி கைகளில் சாப்பிடும் உணவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. என்னதான் உலகின் மோஸ்ட் பெஸ்ட் செஃப் சமைத்து கொடுத்தாலும், அம்மா, மனைவி உணவில் இருக்கும் அன்பும், அக்கறையும் அதில் இருக்காது.

வெறுமென, அவர்கள் சமைத்து போடுவதை சாப்பிடுவதை மட்டும் தவிர்த்து, அவர்களது சமையலை பாராட்டுங்கள். பெரும்பாலும், உப்பு, காரம் குறைவாக இருக்கும் போது குறை கூறுவோமே தவிர, அவர்கள் வாய்க்கு ருசியாக சமைத்து போடும் போது வாய் நிறைய பாராட்டி இருக்க மாட்டோம். உங்கள் வயிறு நிறைந்தால் மட்டும் போதுமா? அவர்களது மனதும் நிறைய வேண்டும் தானே…

Leave a Reply