
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் காஜல் அகர்வால், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பயங்கர பிஸி நடிகை அதோடு முன்னணி ஹீரோகளுடன் ஜோடி சேரும் நடிகை அதோடு திரையுலகில் கால் பதித்த ஆரம்பம் ஆனதில் இருந்து இன்று வரை மவுசு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கிறார்
தமிழிலும் அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்று விட்ட காஜல் அகர்வாலுக்கு திருமணம் என சமீபத்தில் ஒரு செய்தி தீயாக பரவியது.
இதற்கு தற்போது காஜல் அகர்வால் பதிலளித்துள்ளார், அவர் கூறியதாவது எனக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆனால் என்னுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து கொள் என வற்புறுத்தி வருகிறார்கள்.
நல்ல நண்பராக அன்பானவராக உள்ள மனிதரை தேடி கொண்டிருக்கிறேன், இப்படி ஒருவரை பார்த்து விட்டால் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
