Sunday, April 19
Shadow

திருட்டு பயலே-2 திரை விமர்சனம் (பாடம்) Rank 2.5/5

ஒரு படம் வெற்றியடைந்தால் போதும் அந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் அந்தர்வாகியில் தான் இந்த படமும் திருட்டு பயலே முதல் பாகம் மிக பெரிய வெற்றியடைந்தபடம் அந்த வகையில் இந்த படம் அன்று மிக பெரிய ட்ரண்ட் செட் படம் என்றும் சொல்லலாம் காரணம் இந்த படத்தின் கதை முதல் பாகம் கொஞ்சம் காமம் கலந்த கதை ஆனால் இரண்டாம் பாகம் இன்றைய நாட்டு நடப்பை முக்கியமாக சமூக வலைத்தளங்களில் பெண்களின் செயலை படம் பிடித்து காண்பித்து இருக்கும் படம்

இயக்குனர் சுசி கணேசன் மிக சிறந்த இயக்குனர் இவரின் படங்கள் எல்லாமே ஒரு இளமை துள்ளல் அதிகம் இருக்கும் அதுபோல தான் இந்த படமும் காலத்துக்கு ஏற்ப கதைகளை கொடுப்பதில் மிக சிறந்த புத்திசாலி இயக்குனர் இவரின் படங்கள் எல்லாமே ரசிக்கும் படி தான் இருக்கும் இந்த படமும் அப்படிதான் தமிழை மறந்து ஹிந்திக்கு போன சுசி மீண்டும் இயக்கியுள்ள தமிழ் படம்

சரி வாங்க கதைக்கு போகலாம்

பாபி சிம்ஹா காவல்துறையில் நேர்மையாக ஒரு நபராக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். தன் பணியில் என்றும் நேர்மையாக உள்ளதால் பல ஊர்களுக்கு மாற்றுகின்றனர், காரைக்குடியில் இருக்கும் அமலா பாலை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கின்றார்.

அப்போது பெரிய மந்திரி, முக்கிய பிரமுகர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டுபிடிக்க பாபி சிம்ஹாவை ஒரு ரகசிய வேலையை செய்ய சொல்கின்றனர். அதாவது அவர்கள் பேசும் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை.

அப்படி பாபி சிம்ஹா ஒட்டு கேட்கும் போது அதில் பிரசன்னா பல திருமணம் ஆன பெண்களை மயக்கி பேசி வருவது தெரிகின்றது. ஒரு நாள் யதார்த்தமாக அந்த போன் காலில் அமலா பால் வாய்ஸ் கேட்க, அதை தொடர்ந்து பாபி சிம்ஹாவிற்கும், பிரசன்னாவிற்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே மீதிக்கதை.

இந்த கதை சமூக வலைத்தளத்தை பின்னணியாக இருந்தாலும் ஆபாசம் இல்லாமல் ஆண்களின் சூழ்ச்சிக்கு பெண்கள் எப்படி பலியாகிறார்கள் என்று மிக அழககாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசி

பாபிசிம்ஹா தன் திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார் என்று தான் சொல்லணும் மீண்டும் ஹீரோ அவதாரம் கொடுத்த வாய்ப்பை மிகவும் அழகாக செய்துள்ளார் ஆனால் காதல் காட்சிகளில் முன்னைவிட அதிக முன்னேற்றம் என்று தான் சொல்லணும். ஒரு சிறந்த நடிகர் அனால் சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு ஓவர் ஆக்ட்டிங் பண்ணிவிடுகிறார்

பிரசன்னா இவரை இந்த பாத்திரம் போல ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். ஒரு சாப்ட் வேர் இஞ்சினியராக இருந்து கொண்டு பல பெண்களை மோசம் செய்யும் பாத்திரத்தில் செய்துள்ளார் கனகச்சிதமாக செய்துள்ளார் என்று தான் சொல்லணும்.பாபிசிம்ஹாவிடம் மாட்டிக்கொண்டு கூட அவர் அலட்டிக்கொள்ளாமல் அவரிடமே டீல் பேசுவது என மிரட்டியுள்ளார். இன்னமும் பிரசன்னாவை தமிழ் சினிமா எப்போது தான் நன்றாக பயன்படுத்துமோ? என்று கேட்க தோன்றுகின்றது.

முதல் பாகத்தில் அப்போது பேமஸாக இருந்த வீடியோ மூலம் பணம் பறிக்கும் வேலையை காட்டிய சுசி, இந்த படத்தில் அட்வான்ஸ் டெக்னாலஜி மொபைலை கையில் எடுத்திருப்பது சூப்பர். அதிலும் அறிமுகம் இல்லாத நபர்கள் எப்படி ஒரு பெண்ணை மயக்க திட்டம் போடுகின்றார்கள், பேஸ்புக்கில் எப்படியெல்லாம் வேலை செய்கின்றார்கள் என்று காட்டிய விதம் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கலாம், ஒரு சிலர் உஷார் ஆகி திருந்த கூட செய்யலாம்.

நிகழ்காலத்தில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் டெக்னாலஜிகளின் ஆபத்தை காட்டியதற்காகவே பாராட்டலாம். அதே சமயத்தில் திருட்டு பயலே முதல் பாகத்தில் ஒரு எளிமை, யதார்த்தம் இருந்தது, அந்த விஷயத்தில் திருட்டு பயலே 2 கொஞ்சம் செயற்கை மிஞ்சி உள்ளது. படத்தின் முதல் பாதி பிரசன்னா அறிமுகம் வரை மெதுவாகவே நகர்கின்றது.

வித்யாசாகர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார், அதிலும் பின்னணி இசையில் ஒலிக்கும் அந்த திருட்டு பயலே பாடல் ரசிக்க வைக்கின்றது, செல்லத்துரை ஒளிப்பதிவும் சிறப்பு.

முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது அதே போல சமூக பிரச்சனை கையில் எடுக்கும் போது அந்த கதை காலம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்து இருக்கலாம் அதே போல கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்து இருக்கவேண்டும்

மொத்தத்தில் இன்றைய பெண்களுக்கு மிக பெரிய பாடம் முன்பின் தெரியாதவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்று தெளிவாக காண்பித்துள்ளார் Rank 2.5/5

Leave a Reply