Monday, April 27
Shadow

சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி ஆளும் கட்சி அரசியல்வாதிகளால் ஆபத்து

சமீபகாலமாக விஜய் சேதுபதி ஆக்கிரமிப்பு தமிழ் சினிமாவில் அதிகம் என்று தான் சொல்லணும் காரணம் தொடர் வெற்றி அதோடு சிறந்த கதாபாத்திரம் கதைக்களம் கெட்டப் என்பதை விட கதாபாத்திரத்தின் வலிமையை மட்டுமே தேர்ந்த்டுத்து நடிக்கிறார் விஜய் சேதுபதி அப்படியான ஒரு படம் தான் தற்போது நடித்து கொண்டுஇருக்கும் படம் நல்ல நாள் பார்த்து சொல்லுறேன்

விஜய் சேதுபதி பல வேடங்களில் நடித்திருக்கும் நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில், “சீதையை கடத்திட்டு போய் கண்ணியமா நடந்துகிட்ட ராவணன் நல்லவனா? சீதையை சந்தேகப்பட்ட ராமன் நல்லவனா?னு” ஒரு கேள்வியை கேட்டிருக்கார்.

இதனால் பாஜகவினர் இப்படத்துக்கும் பிரச்சனை கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஹெச்.ராஜா இது சம்பந்தமான டிவிட்களை போட்டு வருகிறார்.

எச்.ராஜா ட்விட் போட்டதும் படக்குழுவினர் குஷியடைந்துள்ளனர். காரணம், எச்.ராஜாவாலெப்படி மெர்சல் படம் பேசப்பட்டதோ அது போல தங்களது படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்ப்பார்க்கின்றனர்.

Leave a Reply