
1950-களில் இருந்து 70-கள் வரை திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. நடிகையர் திலகம் என போற்றப்பட்ட இவரது திரையுலக வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அன்றைய உச்ச நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டிபோடும் அளவுக்கு இவரது நடிப்பு அபாரமானது.
அவரது வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் படம் அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் இந்த படம் நடிகையர் திலகம் என்றும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் தயாராகிறது.
