
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாக இருக்கும் தமிழ்படம் 2.0 படம் பூஜையுடன் ஆரம்பமாகி இருக்கிறது.
வெற்றி பெறும் படங்களின் இரண்டாவது, மூன்றாவது பாகங்களை உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாகி இருக்கிறது. அந்த வகையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `தமிழ் படம்’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வந்த நிலையில், இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதில் சிவா, அமுதன், ஐஸ்வர்யா மேனன், மனோபாலா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

சி.எஸ்.அமுதன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா – ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே இந்த பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
கோபி அமர்நாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கண்ணன் இசையமைக்கிறார். விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார்.
