தமிழ் படம் 2.0 – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3.5/5
பொதுவாக தமிழ் ரசிகர்களுக்கு எதிர்மறையான விஷயங்கள் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லலாம் அது சினிமாவாக இருக்கட்டுமில்லை அரசியலாக இருந்தாலும் சரி அதுமாதிரியான செய்திகளுக்கும் சினிமாவுகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லணும்
அதை ஒரு சிலர் மிக சரியாக பயன்படுத்தி வெற்றிகொள்வார்கள் அப்படி வெற்றி கொண்ட ஒரு திரைப்பட இயக்குனர் என்றால் அது C.S.அமுதன் அவரின் முதல் படம் தமிழ் படம் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள குறைகளை கிண்டல் பண்ணி படம் எடுத்து மிக பெரிய வெற்றி கண்டவர். இந்த வெற்றியின் தொடர்ச்சியாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் படம் 2.0 எடுத்து இருக்கிறார். இந்த படத்திலும் அதே பார்முலாவை பயன் படுத்தியுள்ளார் ஆனால் இந்த முறை வஞ்சனை இல்லாமல் யாரையும் விட்டுவைக்காமல் வச்சு செஞ்சு இருக்கிறார் என்று தான் சொல்லணும் குறிப்பாக ரஜினி கமல் இப்படி பல முன்னணி ஹீரோகளையும் விடவில்லை .
ச...

