
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பகத் பாஷில், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் கேரள உரிமை அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்’.
மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாஷில், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை ஈ4 நிறுவனம் அதிக விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பகத்பாசில், நயன்தாரா நடித்திருப்பது ‘வேலைக்காரன்’ பட வினியோக உரிமையை விரும்பி வாங்கி காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ல் வெளியாக இருக்கிறது.
