Saturday, April 18
Shadow

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கிய கவுதம் மேனன்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

தனுஷ் – மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், கவுதம் மேனன் விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வந்தார். தனுஷும் வடசென்னை படத்தில் பிசியாகி விட்டார்.

இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு கவுதம் மீண்டும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள கவுதம் மேனன் படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

Leave a Reply