
வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயன் படம் வேலைக்காரன் இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது காரணம் சிவகார்த்திகேயன் என்றாலே குழந்தைகளின் ஹீரோ பள்ளி விடுமுறை அதை விட படத்தின் கதையும் ஒருபக்கம் மிக பெரிய நட்சத்திர பட்டாளம் இதையும் மீறி ஒரு சிலர் இந்த படத்தில் என்னத்தை சாதிக்க போகிறார் என்று ஒரு சிலர் இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் வரும் வெள்ளி வெளியாகிறது
இது ஒரு பக்கம் இருக்க சிவாவின் போன படம் ரெமோவில் அவர் பெண் வேடத்தில் நடித்து மிக பெரிய வெற்றி கிடைத்தது அதோடு ஒரு சில விமர்சனங்களும் வந்தது அதை பற்றி சிவாவிடம் கேட்டதுக்கு அவரின் பதில்
‘ரெமோ’ படத்தில் பெண்களைப் பின்தொடர்தல் குறித்துக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தீர்களே. அப்போது என்ன நினைத்தீர்கள்?

‘ரெமோ’ ஒரு காமெடி படம். காமெடி படத்துக்குள் போய் ஆராய்ச்சி செய்வது தவறு. அதை அவ்வளவு சீரியஸாக எடுத்து விவாதித்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
நீங்கள் இதைத் தவிர்த்திருக்கலாமே என்று சொல்லியிருக்கலாம், சிலர் ‘சமுதாயத்தின் சீர்கேடு’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். சிவகார்த்திகேயன் உங்கள் மீது குழந்தைகள் பார்வை நிறைய இருக்கிறது. இப்படிப் பண்ணாதீர்கள் என்று சொல்லியிருந்தால் என் தலையில் ஏறியிருக்கும். சமுதாயத்தைச் சீரழிக்கும் வகையில் அப்படத்தில் எதுவும் சொல்லவில்லையே. ‘ரெமோ’ மட்டும்தான் சமுதாயத்தின் சீர்கேடா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அந்தக் கேள்வி எழும்போது மொத்தப் பிரச்சினையும் என் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்கிறேன். பலரும் பார்க்கிறார்கள் என்பதால் இனிமேல் ரொம்ப கவனமாக இருப்பேன்.
