Wednesday, October 28
Shadow

வட இந்திய பிலிம்பேர் விருது .. சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார் வித்யா பாலன்!

மும்பை: பிலிம்பேர் பத்திரிக்கை ஆண்டு தோறும் வடஇந்திய மற்றும் தென்னிந்திய திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 63-வது வட இந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது.

இதில் 2017ம் ஆண்டு வெளிவந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.சிறந்த படத்துக்கான விருது ஹிந்தி மீடியம் படத்திற்கு வழங்கப்பட்டது. பரேலி கி பர்பி படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் சிறந்த இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹிந்தி மீடியம் படத்தில் நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், தும்ஹாரி சுலு படத்தில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த படத்துக்கான ஜூரி விருது நியூட்டன் படத்திற்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான ஜூரி விருது டிராப்பட் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவுக்கும், நடிகைக்கான விருது சீக்ரட் சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த ஜரியா வாசிமுக்கும் வழங்கப்பட்டது.

Leave a Reply