
தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என அனைத்து பொறுப்புகளையும் தாங்கிய வாராகி தனது முதல் படைப்பான ‘சிவா மனசில புஷ்பா’ திரைப்படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார்.
படத்தின் தலைப்பிலேயே பல அரசியல் சிக்கல்களை உள்ளடக்கிய இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் சென்னை பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழா சரியாக மாலை 5 மணியளவில் துவங்கியது. விழா ஆரம்பத்தில் விஷாலின் ஊழல் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தார் வாராகி.
அப்படி என்ன ஆதாரம் என்பதை பார்ப்பதற்காக பத்திரிக்கையாளர்களும் மணிக்கணக்கில் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கு பிறகு சரியாக 10 மணியளவில் அந்த விடீயோவை வெளியிட்டார் வாராகி.
அந்த வீடியோவில் நடிகர் ஜே கே ரித்திஷ் மற்றும் இன்னும் சிலர் பேசிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில், விஷாலை பற்றி அவர்கள்தான் கருத்து கூறுகிறார்களே தவிர விஷால் ஊழல் செய்தது பற்றிய தகவலோ அல்லது காணொளியோ என்று எதுவும் இல்லை.
5 மணி நேரம் பத்திரிக்கையாளர்களை காத்திருப்பில் இருக்க வைத்துவிட்டு அவர்களின் நேரத்தை வீணடித்தார் வாராகி.
நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் என மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள விஷாலை பற்றி எதாவது கருத்து கூறினாலோ அல்லது அவரை பற்றி பேசினாலோ தனது படத்தினை விளம்பரப்படுத்திவிடலாம் என்ற ஒரு மனக்கணக்கில் திகழ்கிறார்.
படத்தின் பாடல்களையும் ட்ரெய்லரையும் பார்க்கும் போது ஏதோ ஆபாச பட காட்சிகளின் உச்சமாக தான் இருந்தது.
விளம்பர தேவைக்காக ஒரு நிர்வாகத்தின் பொறுப்பில் இருப்பவர்களை பற்றி பேசுவது என்ன மாதிரியாக விளம்பர யுக்தி என்று புரியவில்லை.
