Tuesday, April 21
Shadow

Tag: #Vaaragi

விஷாலை வீண் வம்புக்கு இழுத்து விளம்பரம் தேடும் ‘வாராகி’!

விஷாலை வீண் வம்புக்கு இழுத்து விளம்பரம் தேடும் ‘வாராகி’!

Latest News, Top Highlights
தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என அனைத்து பொறுப்புகளையும் தாங்கிய வாராகி தனது முதல் படைப்பான ‘சிவா மனசில புஷ்பா’ திரைப்படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார். படத்தின் தலைப்பிலேயே பல அரசியல் சிக்கல்களை உள்ளடக்கிய இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் சென்னை பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழா சரியாக மாலை 5 மணியளவில் துவங்கியது. விழா ஆரம்பத்தில் விஷாலின் ஊழல் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தார் வாராகி. அப்படி என்ன ஆதாரம் என்பதை பார்ப்பதற்காக பத்திரிக்கையாளர்களும் மணிக்கணக்கில் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கு பிறகு சரியாக 10 மணியளவில் அந்த விடீயோவை வெளியிட்டார் வாராகி. அந்த வீடியோவில் நடிகர் ஜே கே ரித்திஷ் மற்றும் இன்னும் சிலர் பேசிக் கொண்டிருந்த வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதில், விஷாலை பற்றி அவர்கள்தான் கருத்து கூறுகிறார்களே தவிர விஷால் ஊழல...