
இரண்டு நிமிடங்கள் மட்டுமே வரும் புருவ அசைவுகளை வைத்து உலகையே கட்டிப்போட்டுள்ள மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு எதிராக ஹைதராபாத்தில் இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்ய மலரய பூவி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். நேற்று முன் தினம் வெளியான ஒரு அடர் லவ் படத்தின் டீசர் காட்சிகள் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை இன்டர்நெட் புயலாக மாற்றியது.

ஒரே நாள் இரவில் சமூக வலைதளங்களில் பிரியா வாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. இந்நிலையில் பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஹைதராபாத்தின் ஃபலுக்நுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஒரு அடர் லவ் படத்தில் வரும் மணிக்யா மலரய்ய பூவி பாடலின் வரிகளில் புனித நபராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது. இந்த வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர்களின் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வாராய்ங்க?
