Saturday, April 18
Shadow

காதலர் தினத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய சதீஷ்

பிரபல காமெடி நடிகர் சதீஷ். ‘தமிழ்ப்படம்’ படம் மூலம் நடிராக அறிமுகமான இவர், ‘மெரினா’, ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இளம் கதாநாயகர்கள் அனைவருடன் இணைந்து நடித்துள்ள சதீஷ்க்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இவருடைய நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ‘இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

மேலும், ம்ம்ம்ம் இதுக்கு அடுத்த லவலுக்கு தான் நமக்கு போகத் தெரியலயே’ என்றும் கூறியிருக்கிறார். உலகமே காதலர் தினத்தை கொண்டாடும் நிலையில், சதீஷ் மட்டும் நண்பர்கள் தினத்தை கொண்டாடி இருக்கிறார்.