
இன்று எல்லா நடிகர்களும் அரசியல் கட்சி ஆரம்பிக்க தயாராகிவிட்டார்கள் ஆனால் சில வருடங்கள் முன்னெ அரசியல் கட்சி ஆரம்பித்தவர் விஜய் என்று தான் சொல்லணும் அதுக்கும் ஜெயலலிதா இருக்கும் போதே கட்சி ஆரம்பித்த பெருமை விஜய் மட்டும் சாரும்
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சிகரமான அரசியல் கதைகளில் பல படங்களை இயக்கியவர். அதோடு, விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி எதிர்காலத்தில் அவரை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதும் அவரது ஆசையாக இருந்து வந்தது.
விஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக விஜய்யின் அரசியல் எண்ணங்கள் முடங்கி போய் உள்ளது. இதனால் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இது குறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டால், இன்றைய சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது சரியென்று படவில்லை. அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்பதை விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்வதற்கில்லை என கூறியுள்ளார்
