Saturday, April 18
Shadow

விஜய் தான் எனது அடுத்த டார்கெட் சொல்லும் இளம் நடிகர் ஏன் எதுக்கு

பொதுவாக இளமை நடிகர்கள் எப்போதும் விஜய் மற்றும் அஜித் இவர்களை முன் உதாரணமாக வைத்து தான் நடிப்பார்கள் இவர்கள் இடத்தை எப்படியாவது பிடிக்கணும் என்ற எண்ணம் இல்லாத இளம் நடிகர்களே இல்லை என்று சொல்லலாம் அதிலும் பலருக்கு விஜய் மீது தான் கண் அதில் இவருக்கும் விஜய் தான் டார்கெட் என்று சொல்லி இருக்கிறார் .

நடனம் என்றாலே தமிழ் சினிமா நடிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது பிரபுதேவா மற்றும் விஜய். இவர்களது படங்களில் நடனத்திற்கு பஞ்சமே இருக்காது.

தற்போது வளர்ந்து வரும் இளம் நடன இயக்குனர்கள் எல்லாம் இவர்களை ஒரு ரோல் மாடலாக வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படி நடனத்தில் மிகுந்த ஆசை கொண்டவர் நடிகர் சாந்தனு. இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து குலேபா என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அவருடன் நடனம் ஆடியதற்கு பிரபுதேவாவிற்கு நன்றியை கூறிய சாந்தனு அடுத்து என்னுடைய டார்க்கெட் விஜய் அவர்கள் தான் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.