
தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோ அதொடு சகலகலாவல்லவன் என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் ஒரு கலக்கு கலக்கியவர்.
ஹிந்தியில் தனுஷ் அறிமுகமான முதல் படம் ராஞ்ஜனா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக டில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அவுஜா என்பவரை ரகசியமாக காதலித்து வந்தார்.

ஆனபோதும் அதுகுறித்த செய்திகளுக்கு சோனம் கபூர் சரியான பதில்களை சொல்லாததால் ஒரு கட்டத்தில் அவரது காதல் செய்திகள் வதந்திகளாக கருதப்பட்டு வந்தன.
இப்போது திடீரென்று அடுத்த வாரத்தில் மும்பையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் காதலர் ஆனந்த் அவுஜாவுடன் சோனம்கபூரின் திருமணம் நடைபெறயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்களாம்.
