
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாகவே மாறியுள்ளார். இந்த புள்ளைக்குள்ள இப்படி ஒரு திறமையா என்று வியக்காதவர்களே இல்லை.
இந்நிலையில் கீர்த்திக்கு மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. கமல் ஹாஸனை வைத்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளார்
சாவித்ரிகாருவுடன் நான் சேர்ந்து எடுத்த புகைப்படம் உள்ளதா என்று பலரும் கேட்கிறார்கள். அப்பொழுது இல்லை ஆனால் தற்போது இருக்கிறது என்று கூறி தான் கீர்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் படத்தில் நடிக்க பல பிரபலங்கள் ஏங்கிய நிலையில் அவர் கீர்த்தியை சாவித்ரி என்று கூறியிருப்பது கீர்த்திக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை விட கீர்த்திக்கு வேறு என்ன வேண்டும்.
நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்திக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீனிவாச ராவ் பாராட்டியதே அவருக்கு பெரிய விருது கிடைத்தது போல தான் என்கிறார்கள் திரையுலகினர்.
