
இவர் இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.
1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவின் ராமகிருஷ்ணா மையத்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக இவர் விளங்கினார். அனுஷ்காவும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான நோரா ஜோன்ஸ் இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.

கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007 ஆகஸ்ட் 28 அன்று, ப்ரீத்திங் அண்டர் வாட்டர் என்னும் இசைத்தொகுப்பினை வெளியிட்டார். இது பாராம்பரிய சித்தார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், நோரா ஜோன்ஸ், ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சித்தாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவிசங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.
2009ஆம் ஆண்டு அனுஷ்கா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார்
