
பிக் பாஸ் நேற்று மிக கோலாகலமாக ஆரம்பித்துள்ளது இதில் நாம் எதிர்பார்த்ததை விட இரண்டு பேர் அதிகமாக இந்த முறை பங்கு பெறுகிறார்கள் ஆம் நாம் எல்லோரும் பதினாலுபேர் என்று தான் கூறியிருந்தோம் ஆனால் பதினாறு பேர் பங்கு பெறுகிறார்கள். அடுத்து போன முரைவிட இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் அடங்கியுள்ளது அதோடு இந்த முறை பல காமெடியன்கள் உள்ளே சென்றுள்ளனர்.
ஆனால் நேரு தாடி பாலாஜி கொஞ்சம் கூட உற்சாகமாக இல்லை நேற்றே சென்ராயன் மக்களை கவரும் விதத்தில் கலக்க ஆரம்பித்து விட்டார்.இவை எல்லாத்தை விட இன்றே பிக்பாஸ் தன் தண்டனை லீலைகள் ஆரம்பித்துவிட்டார் என்று தான் சொல்லணும் உள்ளே சென்று உள்ள நாலு பேருக்கு மட்டும் அவர்களின் உடைகள் கொடுக்கவில்லை. குறிப்பாக சென்ராயன் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இருவரின் உடைகள் கொடுக்கவில்லை.
இதனால் இவர்கள் படும் பாடு ஒரு பக்கம் நகைசுவையாக இருந்தாலும் இவர்களை ஏன் பிக்பாஸ் இப்படி செய்தார் என்பது தான் கேள்விகுறி.
அதோடு ரசிகர்களுக்கு இன்று மேலும் ஒரு இனிப்பு செய்தி என்னவென்றால் சிறப்பு விருந்தினராக ஓவியா இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார்.
