Monday, November 9
Shadow

உவமைக் கவிஞர் சுரதா மறைந்த தினம் இவரை பற்றிய ஒரு சில வரிகள்

கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருஷ்ணமூர்த்தி இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். கடந்த 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, மற்றும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

‘தேன்மழை’ என்பது அவருடைய சிறந்த கவிதைகளின் தொகுப்பு. நீர்க்குமிழி திரைப்படத்தில் இடம் பெற்ற
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா – ஆறடி நிலமே சொந்தமடா!’ என்ற பாடல், தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம் பெற்ற ‘அமுதும் தேனும் எதற்கு – நீ, அருகினில் இருக்கையில் எனக்கு?’, நாடோடி மன்னன் படத்தில் இடம் பெற்ற ‘கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே’, மறக்க முடியுமா? படத்தில் இடம் பெற்ற ‘வசந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?’, மேஜர் சந்திரகாந்த் படத்தில் இடம் பெற்ற ‘விண்ணுக்கு மேலாடை’ முதலான புகழ்பெற்ற திரை இசைப் பாடல்கள் சுரதாவின் கை வண்ணத்தைப் பறைசாற்றி நிற்பவை.

இவர் தன்னுடைய 84ம் வயதில் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு லோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர்.