Sunday, June 28
Shadow

புருவ அழகிற்கு வந்த நேரம் பொறாமையில் சக நடிகைகள்

மலையாளத்தில் உருவாகியுள்ள ஒரு ஆதார் லவ் படத்தில் நடித்துள்ளவர் பிரியா பிரகாஷ் வாரியர்.. அதில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவே என்கிற பாடலில் தனது அசத்தலான கண் சிமிட்டல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பிரியா வாரியரை தேடி,திரைப்பட வாய்ப்புகளும், விளம்பர பட வாய்ப்புகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில் சமீபத்தில் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தை புரமோட் பண்ணும் விளம்பரப்படத்தில் நடிக்க, பிரியா வாரியருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் ஒரு அறிமுக நடிகை இவ்வளவு தொகை சம்பளமாக பெறுவது மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த நிறுவனங்களின் பிராண்டுகளையும் ஒருமுறை ஷேர் செய்ய லட்சம் ரூபாய் மற்றும் வரிகள் தனியாக என வசூலிக்கிறாராம் பிரியா வாரியர்.